
Equality Labs’ Executive Director, Thenmozhi Soundararajan, Receives Prestigious Vaikom Award for Social Justice
OAKLAND, CA – On October 22, 2025 the Tamil Nadu government publicly announced that this year’s prestigious Vaikom Award for Social justice will be presented to Equality Labs’ co-founder and Executive Director, Thenmozhi Soundararajan. Equality Labs congratulates Ms. Soundararajan on this milestone achievement, which is the result of decades of her unwavering commitment to Dalit feminist activism and anti-caste movement organizing.
The Vaikom Award, first established in 2023 in honor of the late Tamil social reformer Periyar E. V. Ramasamy, is awarded annually to individuals or organizations who exhibit a noteworthy devotion to causes of equality and justice, with an emphasis on anti-caste contributions. The award is named after the historic Vaikom Satyagraha (Sanskrit for “insistence on truth”), an act of civil resistance dedicated to achieving equal access for those from all caste backgrounds to the Vaikom Temple in Kerala. In regards to her achievement, our Executive Director stated:
“I am deeply honored to receive this award from the Government of Tamil Nadu, in the name and spirit of Periyar. His legacy calls us to a simple, urgent truth: it is our duty to end discrimination—whether based on caste, gender, sexual orientation, or religion—wherever we encounter it.
Today, I accept this award because of the courage, power, and vision of the Dravidian movement, which has long fought to uphold the promise of our Constitution. We will continue this work until self-respect is not merely an ideal, but a lived reality for every person. I accept this honor with profound gratitude to my mother, father, and my entire family, who nourished me with love, confidence, and self-respect.
Whether we traveled across the kala pani or stood here in Tamil Nadu, they taught me that no one could take away our dignity. They raised me in the teachings of Periyar, Ambedkar, Jyotibai and Savitribai Phule, and so many other anti-caste reformers, reminding us that our legacy is ultimately rooted in freedom and dignity.
I also accept this award on behalf of all Dalit women survivors, and on behalf of my team at Equality Labs, who have worked tirelessly to bring global attention to the injustices of caste, gender, and religious discrimination. We look forward to the day when each of us is free—because none of us is free until all of us are free from the violence of caste.
Self-respect to all and let us all be thozars in justice.”
Soundararajan, a transmedia artist, theorist, and futurist, has devoted her career to advocating for South Asian religious and cultural minorities. Her book, The Trauma of Caste, uniquely introduces a trauma-informed lens to transnational Dalit feminism. This work is a manifesto for collective healing and radical imagination, aligning traditional Ambedkarite values with the liberatory future our movement spaces are building towards.
About Thenmozhi Soundararajan: Thenmozhi Soundararajan is a Dalit American author, artist, technologist, and the Executive Director of Equality Labs—one of the largest Dalit civil rights organizations advancing the power, and dignity of caste-oppressed people in the United States and around the world. For over two decades, she has mobilized South Asian communities and their allies to dismantle systems of oppression centuries in the making, working toward the end of caste apartheid, gender-based violence, racial injustice, and religious intolerance.
Tamil translation:
Tamil Nadu Government has conferred the 2025 Vaikom Award to Thenmozhi Soundararajan from California, USA.
உடனடி வெளியீட்டிற்காக அக்டோபர் 22, 2025
இந்த ஆண்டுக்கான மதிப்புமிக்க வைக்கம் சமூக நீதி விருதை ஈக்வாலிட்டி லேப்ஸின் (Equality Labs) நிர்வாக இயக்குநரான தேன்மொழி சௌந்தரராஜன் பெறுகிறார்.
அக்டோபர் 22, 2025 அன்று, இந்த ஆண்டுக்கான மதிப்புமிக்க வைக்கம் சமூக நீதி விருது ஈக்வாலிட்டி லேப்ஸின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநரான தென்மொழி சௌந்தரராஜனுக்கு வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. பல தசாப்தங்களாக தலித் பெண்ணிய செயற்பாடு மற்றும் சாதி எதிர்ப்பு இயக்கம் அமைப்பதில் அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத அர்ப்பணிப்பின் விளைவாக இந்த மைல்கல் சாதனைக்காக தேன்மொழி சௌந்தரராஜனுக்கு இந்த விருது கிடைத்திருப்பது பாராட்டுதலுக்குரியது என்று ஈக்வாலிட்டி லேப்ஸ் தன்னுடைய வாழ்த்துக்களை உரித்தாக்குகிறது.
மறைந்த திராவிட சமூக சீர்திருத்தவாதி பெரியார் ஈ. வெ. இராமசாமியின் நினைவாக 2023 இல் முதன்முதலில் நிறுவப்பட்ட வைக்கம் விருது, சமத்துவம் மற்றும் நீதிக்கான காரணங்களுக்காக குறிப்பிடத்தக்க அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் தனிநபர்கள் அல்லது நிறுவனங்களுக்கு ஆண்டுதோறும் வழங்கப்படுகிறது, இதில் சாதி எதிர்ப்புக் பங்களிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
கேரளாவில் உள்ள வைக்கம் கோவிலில் அனைத்து சாதிப் பின்னணியில் உள்ளவர்களுக்கும் சமமான உள்நுழைவினைப் பெறுவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு சிவில் எதிர்ப்பான வரலாற்றுச் சிறப்புமிக்க வைக்கம் சத்யாகிரகத்தின் (“உண்மையை வலியுறுத்துதல்” என்று வட மொழியில் பொருள்) நினைவாக இந்த விருதுக்கு பெயரிடப்பட்டது.
அவரது சாதனை குறித்து, ஈக்வாலிட்டி லேப்ஸின் நிர்வாக இயக்குநர் கூறியது:
“பெரியாரின் பெயராலும், உணர்வாலும், தமிழ்நாடு அரசிடமிருந்து இந்த விருதைப் பெறுவதில் நான் மிகுந்த பெருமையடைகிறேன். அவரது பார்வை ஒரு எளிய, அத்தியாவசியமான உண்மையை நோக்கி நம்மை அழைக்கிறது: நாம் சந்திக்கும் இடங்களில் எல்லாம் – சாதி, பாலினம், பாலியல் நோக்குநிலை அல்லது மதம் ஆகியவற்றின் அடிப்படையில் எதுவாக இருந்தாலும் – பாகுபாட்டை முடிவுக்குக் கொண்டுவருவது நமது கடமை.
அரசியல் அமைப்பின் உறுதியான நிலைப்பாட்டினை நிலைநிறுத்த தொடர்ந்துப் போராடி வரும் திராவிட இயக்கத்தின் துணிவு, தொடர் போராட்டங்கள் மற்றும் தொலைநோக்கு பார்வையின் ஊடாக இந்த விருதினை நான் ஏற்றுக் கொள்கிறேன். சுயமரியாதை என்பது வெறும் இலட்சியமாக இல்லாமல், ஒவ்வொரு நபருக்கும் அவர்களின் வாழ்வின் யதார்த்தமாக மாறும் வரை இந்த வேலையை நாங்கள் தொடருவோம். அன்பு, நம்பிக்கை மற்றும் சுயமரியாதையுடன் எனக்கு ஊக்கமளித்த எனது தாய், தந்தை மற்றும் எனது முழு குடும்பத்திற்கும் ஆழ்ந்த நன்றியுடன் இந்த மரியாதையை நான் ஏற்றுக்கொள்கிறேன்.
நாங்கள் ‘கலா பாணி’யைக் கடந்து பயணித்தாலும் அல்லது இங்கேயே தமிழ்நாட்டில் நின்றிருந்தாலும், எங்கள் கண்ணியத்தை யாராலும் பறிக்க முடியாது என்று அவர்கள் எனக்குக் கற்பித்தார்கள். பெரியார், அம்பேத்கர், ஜோதிபா மற்றும் சாவித்திரிபாய் பூலே மற்றும் பல சாதி எதிர்ப்பு சீர்திருத்தவாதிகளின் போதனைகளில் அவர்கள் என்னை வளர்த்தார்கள், எங்களுடைய பாரம்பரியம் என்பது இறுதியில் சுதந்திரத்திலும் கண்ணியத்திலும் வேரூன்றி உள்ளது என்பதை எங்களுக்கு நினைவூட்டினார்கள்.
உயிர் பிழைத்த அனைத்து தலித் பெண்களுக்காகவும், சாதி, பாலினம் மற்றும் மத பாகுபாடுகளின் அநீதிகளுக்கு உலகளாவிய கவனத்தை ஈர்க்க அயராது உழைத்த எனது ஈக்வாலிட்டி லேப்ஸ் குழுவின் சார்பாகவும் இந்த விருதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நம்மில் ஒவ்வொருவரும் சுதந்திரமாக இருக்கும் நாளை நாங்கள் எதிர்நோக்குகிறோம் – நம் அனைவரையும் சாதிய வன்முறையிலிருந்து விடுவிக்கும் வரை நம்மில் யாருமே முழுமையாக விடுதலை அடைந்ததாக கருத முடியாது.
அனைவருக்கும் சுயமரியாதை மற்றும் சமூக, நீதியில் நாம் அனைவரும் தோழர்களாக இணைவோம்.”
சௌந்தரராஜன், ஒரு டிரான்ஸ்மீடியா கலைஞர், கோட்பாட்டாளர் மற்றும் எதிர்காலவியலாளர், தனது வாழ்க்கையை தெற்காசிய மத மற்றும் கலாச்சார சிறுபான்மையினருக்காக வாதிடுவதில் அர்ப்பணித்துள்ளார். அவரது புத்தகம், தி ட்ராமா ஆஃப் காஸ்ட் (The Trauma of Caste), சர்வதேச தலித் பெண்ணியத்திற்கு ஒரு அதிர்ச்சி பற்றிய விழிப்புணர்வு கொண்ட பார்வையை தனித்துவமாக அறிமுகப்படுத்துகிறது. பாரம்பரிய அம்பேத்கரிய மதிப்பீடுகளை உள்ளடக்கிய இந்த வேலை கூட்டு சிகிச்சைமுறை மற்றும் தீவிர கற்பனைக்கான ஒரு அறிக்கையாகும். இது எங்கள் இயக்கப் பகுதிகள் கட்டியெழுப்ப முற்படும் விடுதலையின் எதிர்காலத்தை சீரமைக்கிறது.
தேன்மொழி சௌந்தரராஜன் பற்றி: தேன்மொழி சௌந்தரராஜன் ஒரு தலித் அமெரிக்க எழுத்தாளர், கலைஞர், தொழில்நுட்ப வல்லுநர் மற்றும் ஈக்வாலிட்டி லேப்ஸின் நிர்வாக இயக்குநர் ஆவார் – இது அமெரிக்காவிலும் உலகெங்கிலும் சாதியால் ஒடுக்கப்பட்ட மக்களின் அதிகாரம் மற்றும் கண்ணியத்தை முன்னேற்றும் மிகப்பெரிய தலித் சிவில் உரிமை அமைப்புகளில் ஒன்றாகும். இரண்டு தசாப்தங்களுக்கும் மேலாக, அவர் தெற்காசிய சமூகங்களையும் அவர்களது கூட்டாளிகளையும் பல நூற்றாண்டுகளாக இருந்துவரும் ஒடுக்குமுறை அமைப்புகளை அகற்றுவதற்காக அணிதிரட்டியுள்ளார், சாதி பாகுபாடு, பாலின அடிப்படையிலான வன்முறை, இன அநீதி மற்றும் மத சகிப்பின்மையை முடிவுக்குக் கொண்டுவருவதற்காக உழைத்து வருகிறார்.
Note: அவர் தன் பெயரை செளந்தரராஜன் (அ) சவுந்தர்ராஜன் என்று எப்படி எழுதுகிறாரோ, அதை மட்டும் மாற்றி அமைத்து கொள்ளுங்கள். ”செள” என்று எழுதுவது பழைய மரபு தமிழ். சவு என்று எழுதுவது பெரியாரீய தமிழ் மாற்றத்திற்கு பின்பான தமிழ்.